பொன்னியின் செல்வரே வானதியை பற்றிக் கொள்வீராக மயக்கத்திலும் கடைசி வரையிலும்

எனை வெறுப்பது ஏனோ?
இராஜ இராஜ சோழனே...

ஆயிரம்
பூங்குழலிகள்
உனை சூழ்ந்திருக்கிறார்களோ!


உன் அரியணைக்கு ஆசைபட்டேன்
என்று நினைக்கிறாயோ!

யானை பாகனாய்
இருந்த வேளையே...
நான் உன்னில்
கரைந்துவிட்டேன்
என்பதை அறியலையோ!

வதந்தியாய் ஒரு செய்தி
பொன்னியின் செல்வர்
இறந்துவிட்டார்.
கேட்டு கொண்டு நான் இன்னும் உயிரோடு தான் இருக்கிறேனா!
பொன்னி நதியில்
விழுந்தே மூர்ச்சையாவேன்...
உங்கள் கரம் பற்றிட...

என் காதல்
அரசியல் நாடகம்
என்று எண்ணுகிறீர்களா!

சபதம் ஒன்று
ஏற்றேன்
நான் உங்களுக்கு
உரியவள் எனும்
பொழுது இந்த
சாம்ராஜ்யம்
எனக்கு எதற்கு...
ஒரு காலமும் வேண்டாம்...



எனை
தனியே தவிக்க விடவா?
அப்படி ஒரு
சபதம் மேற்கொண்டாய்
என் வானதி.......

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (2-Mar-16, 7:07 am)
பார்வை : 1085

மேலே