கொடுத்துப்பார்

கொடுத்துப்பார்...
அன்பைக்கொடு தனிமையில் வாடும் ஒருவனுக்கு...
மகிழ்ச்சியைக்கொடு துன்பத்தில் வாழும் மனிதனுக்கு...
அறிவைக்கொடு அறியாது தவிக்கும் பேதைக்கு...
பொருளைக்கொடு ஒருவேளை உணவில்லாத ஏழைக்கு...
வீரத்தைக்கொடு பயத்தில் நடுங்கும் கோழைக்கு...
கல்வியைக்கொடு கல்வியறிவு இல்லாத மக்களுக்கு...
முழுமனதைக்கொடு உன்னை படைத்த இறைவனுக்கு...
இல்லை என்ற சொல்லுக்கு இடமே இல்லை உன் குறிப்பேட்டில்...