பெண்மையைப் பேணுதல் ---- கவியரங்கம்
பெண்மையைப் பேணுவதில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் ---- முதன்மைக் கருப்பொருள்
துணைத் தலைப்புக்கள் :-
1 ) பிறந்த வீட்டினர்
2) புகுந்த வீட்டினர்
3) வேலைக்குச் செல்லுமிடத்தில்
4) பெண்கள்
5) ஆண்கள்
6) சமுதாயம்
தமிழ் வணக்கம் :-
தாய்மொழியாம் தமிழ்மொழியைத் தாள்பணிந்து வணங்குகின்றேன் .
வாய்மொழியாய்ப் பேசிடவும் வகையானத் தாய்மொழியே !
சேய்போல எனைக்காக்கும் செந்தமிழாம் தாய்மொழியே !
தாய்போல எண்ணுகின்றேன் தமிழ்மொழியே நீவாழ்க !!!
அவையடக்கம் :-
நிலாமுற்றம் முகநூலில் நிறைவாகக் கவியரங்கம்
உலாவரவும் செய்கின்றோம் உவப்பில்லா உவகையினால்
பலாக்கனியைப் போன்றதொரு பல்சுவையைத் தருகின்ற
நிலாமுற்றம் கவியரங்கம் நீடுழியும் சிறந்திடவே !!!!
கருப்பொருள் :-
பெண்மையைப் பேணுவதில் பெரும்பங்கு வகிப்பவர்கள்
உண்மையை இவ்விடமே உரையுங்கள் அழுத்தமாக
கண்இமையைப் பேணுதல்போல் கருத்தாகப் பேணுகின்ற
மண்ணுலகின் தெய்வத்தை மனங்குளிரப் போற்றுங்கள் .
துணைத் தலைப்புக்கள் :-
1) பிறந்த வீட்டினர் :-
பிறந்தவீடு பெண்டிர்க்குப் பிசகாது பெருமைதரும் .
உறவாடும் இரத்தபந்தம் உயிராக மதித்திடுவர் .
மறவாது பெண்ணினத்தை மங்கலமாய் நடத்துவராம் .
சிறந்தோங்கிப் பென்மையுமே சிறப்பாக வாழ்ந்திடுவர் .
2) புகுந்த வீட்டினர் :-
புகுந்தவீடு பெண்டிர்க்கு புகழ்சேர்க்கும் வீடன்றோ ?
தகுந்தவிடம் கிடைத்துவிட்டால் தரத்திற்கோ பஞ்சமில்லை .
வகுத்தவழி சிறந்துவிட்டால் வாழ்வுநெறி அதுவன்றோ ?
புகுந்தவீடும் பெண்மைக்குப் புதியதோர் உலகன்றோ ?
3) வேலைக்குச் செல்லுமிடத்தில் :-
காலையிலே எழுந்தவுடன் காத்திடுவாள் குடும்பத்தை .
வேலையிலே செல்லுமிடம் வென்றிடுவாள் பல்லோர்முன்.
பாலையிலே நின்றாலும் பசுந்தளிராய் ஒளிர்ந்திடுவாள் .
மாலையிலே வந்தபின்னும் மறவாதீர் பெண்மையினை .
4) பெண்கள் :-
பெண்மையினைப் பேணுதலில் பெண்களுமே பெரும்பங்கை
வெண்மதியைப் போன்றவராய் வெல்கின்றார் ஈங்கின்றே .
புண்படாது பெண்மையினைப் புன்னகையால் பேணுகின்றார் .
விண்ணிலுள்ள கதிரோன்போல் வியன்பொருளாய்ப் போற்றிடுவோம் .
5) ஆண்கள் :-
பேணுதலில் ஆண்களுமே பெரும்பங்கு வகித்திடுவர் .
நாணுதலில் பெண்மைக்கு நன்னெறிகள் சொல்லிடுவார் .
பூணுதலில் மணக்கோலம் பூவையர்க்கு அழகென்பார் .
காணுதலில் ஆண்களுமே காரிகையைப் பேணிடுவார் .
6) சமுதாயம் :-
சமுதாயம் பெண்களுக்குச் சமமான நிலைதன்னை
அமுதமாய்த் தந்துள்ளார் அன்னையர்க்கு உயர்வுநிலை
சமுதாயம் பெண்மையினைச் சந்ததியாய்ப் பேணுதல்போல்
குமுதமாய்க் கோபுரமாய் குவலயமாய் நின்றிடுதே .
கவியரங்கம் :-
எட்டாவது கவியரங்கம் எத்திக்கும் புகழ்பரப்பும்
கிட்டாது ; வந்திடுவீர் கிளர்ச்சியுடன் கவிவனைய .
பட்டங்கள் உமைச்சேரும்; பாசத்தால் அழைக்கின்றோம் .
திட்டங்கள் பலகொண்டு திறமையுடன் எழுதுங்கள் .
எழுதுங்கள் அழகாக ஏற்றமிகு பாடல்கள்
பழுதின்றி உங்களது படைப்புகள் அத்தனையும்
தொழுகின்ற நேரிவழியே தோற்காது எமைச்சேரும் .
ஒழுக்கத்தின் ஆக்கத்தில் ஒப்பில்லாக் கவியரங்கே !
தலைமையினைத் தந்திட்டத் தரத்தினிலே சிறந்தவர்கள்
மலைமலையாய் புகழோங்கி மகத்துவமாய் வாழ்ந்திடுவார் .
சிலைகளுமே நின்றிங்கு சிற்பமாக மாறிஎனை
அலையெனவே அழைக்கின்ற அன்புடையீர் நன்றிநன்றி !!!!!