என்னையும் மாற்றி விட்டாள்

ஒரு நாள்,
மாலை வேளை மனதை மயக்கிட
சாலை ஓரம் நடந்து சென்றேன்..
திடீரென ஒரு தென்றல்;திரும்பிப் பார்த்தேன்..
தெரிந்தது ஒரு தேவதை..
வார்த்தைகள் அவளிடம் தஞ்சம் அடைந்ததால்
வர்ணிக்க இயலாமல் வாயடைத்து நின்றேன்..
வைகாசி தென்றலில் நீந்தும் கருப்பு நதியலை
அவளின் கூந்தல்..
நெற்றி என்னும் மகுடத்தில் ரத்தினமாய் ஜொலித்தது
அவளின் பொட்டு..

கண்ணுக்கு மை அழகு என்கிறது கவிதை;
கண் மைக்கு அழகு வந்ததே அவள் கண்களால் தான் என்கிறேன் நான்..
அவள் இதயத்தில் நுழைய என் காதல் வாகனத்திற்கு
பாலமிட்டது அவளின் புருவங்கள்..

முன்பு கவிஞர்களைப் பார்த்த பொழுது கோபம் வந்தது
இப்பொழுது எனக்கே கவிதை வருகிறது;
ஆம்..
நானும் காதலிக்கிறேன்..

அவளைப் பார்த்த பிறகு என் கண்களில் நடந்தது
மல்யுத்தம்-காதலுக்கும் உறக்கத்திற்கும்;
இறுதியில் வென்றது காதல்
வெளியேறியது உறக்கம்.

அவளைக் கண்ட பொழுது தான்
என் காதல் குழந்தையை எனக்கு
அடையாளம் காட்டியது என் இதயம்.

நான் இறக்கக் கூட நினைத்தேன்;
அவளை மறக்க நினைக்கவில்லை.

இருள் கரிக்கும் அமாவாசை இரவில் கூட
அவள் நினைவுகள்
வண்ண நிலவாய் வட்டமடிக்கிறது..

புன்னகையை இழந்த எனக்கு
இப்பொழுது கிடைத்தது புலவன் பட்டம்;

எப்பொழுது தருவாள்?
இந்த ஏழை புலவனுக்கு
அவள் இதய அரண்மனையில்
காதல் பரிசை...

எழுதியவர் : iniyakavi (3-Mar-16, 1:12 pm)
பார்வை : 333

மேலே