கருப்பு செம்மறி ஆடு - மாத்தி யோசிக்கிறது

பே....பே....கருப்பு செம்மறி ஆடே
உன்னிடம் கம்பளியிழை
இருக்கிறதா ?

ஆம் முருகா, இருக்கிறது,
மூன்று மூட்டைகள் நிறையவே;

ஒரு மூட்டை எசமானுக்கு..
ஒரு மூட்டை எசமானி அம்மாவுக்கு..

ஒரு மூட்டை பக்கத்து
வீட்டு மேகாவுக்கு..

சந்தில் நின்று அழுகிற முருகா உனக்கு ... !
கொஞ்சம் கூட இல்லையே !!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Mar-16, 8:34 pm)
பார்வை : 215

மேலே