பெண் என்றால்
வாழ்நாள் முழுவதும்
தியாகம் செய்து சேவை செய்து
கொண்டு இருப்பவள் பெண் தான்
ஆணின் மன வலிமைக்கும்
காரணமானாவளும் அவள் தான்...
பெண் ஒரு மென்மையானவள்
புரியாத புதிர் போல இருப்பவள்
அன்பு ஊற்று எடுக்கும்
இருப்பிடம் அவள் தாயமடி
கடவுள் படைத்த சக்தி அவள்...
புயல் அடித்தாலும் பொறுமை
இழக்காமல் தூண் போல இருந்து
தன் குடும்பத்தை காப்பவள் பெண்தான்...