காலம் நமக்கிருக்கு

அனல் பறக்கும் விவாதம்
கணவன் மனைவி இடையில்
அடுப்பில் அனல் இல்லாததால்...

தூக்கில் தொங்கியது
மின்விசிறி
மின்சாரம் இன்றி...

மிதி வண்டி
சதி வண்டி ஆனது
ரதியின் காத்திருப்பை
நீட்டித்து...

திருகாணி நழுவினால்
கொலுசும் மறைந்துவிடும்
நம்மைப் போலே...


ஒரு புடவை போதும்
இந்த உடலை மறைக்க...
ஒரு புடவை போதும்
இந்த உடலை போர்த்த...
எதுவாகினும் உன் வியர்வையில்... (சம்பாத்தியத்தில்)

வாழும் பொழுது நாம்..
மறைவில் மட்டும் நான்.

சல்லடை போட்டு பிரிக்க முடியாது...
நீரையும் என்னையும் (எண்ணெயும்)


பேருந்து கட்டணம் நீங்கள்
கட்டுவதே இல்லை
இராஜாவை (இளையராஜாவை) போல்..


நிழலுக்கு வலிக்குமா?
வலிக்கிறதே எனக்கு!
நிஜம் வெயிலில் காய்கிறதாம்
நிழல் இன்றி...

நிழலும் இங்கே
இருளாய் போனது
நிஜம் இன்றி..


ஒன்றின் உயிர் வாழ
ஒன்றின் உயிர் போக
எந்த உயிர் வாழும்
அன்றிலில்...


உயிரும் உடலும்
ஒன்று சேரும்
ஒரு கயிற்றில்...

மேகங்கள் ஆசி உண்டு
பூமியின் பாதை உண்டு
காலம் நமக்கிருக்கு


~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (8-Mar-16, 7:14 pm)
Tanglish : kaalam namakkirukku
பார்வை : 105

மேலே