கவிதை நீயென்றால் நான் காகிதமாயிருப்பேன்

ஆண் : உயிர் கொண்டேன் நான் அன்பே நான் உன்னை சேரதான்
உன் சந்தோஷம் எல்லாமே நானாகத்தான்
உடல் உனதாக்கினாய் உயிர் நீயாகினாய்
என் உயிரோட உயிருக்குள் நீ வாழ்கிறாய் ..!!
வாழ்வேன் உனக்காக நான் .....

பெண் : இசையாக நீயும் இசைகின்ற போது
குழலில் உள்ள துளையாய் நானும் இருப்பேன் அன்பே ...!!

ஆண் : விழியாக நீயும் இருக்கின்ற போது
கண்ணே கண்ணை காவல் காக்கும் இமையாகுவேன் ...!!

ஆண் : கவிதை நீயென்றால் நான் காகிதமாயிருப்பேன்

பெண் : உயிர் ஓவியம் நீயென்றால் நான் தூரிகையாயிருப்பேன்

ஆண் : என் நரம்போடு அலை பாய்ந்து என் உயிராகிறாய் உயிர் நீயாகிறாய்

பெண் : வனவாசம் என்றால் அது உன்னோடு ஆனால்
சொர்க்கம் என்று சொந்தம் கொண்டு உன் கை சேருவேன்

ஆண் : உன் கூந்தல் பூவாய் பிறப்பேனே நாளும்
வாசம் கொண்டு வாசம் தந்து உன் அழகாகுவேன்

பெண் : உலகம் மாறிடலாம்
இந்த அழகும் ஓடிடலாம்
நம் குணமும் மாறிடலாம் நம் காதல் மாறிடுமா ??
நாம் கொண்ட நம் காதல் மாறாதது !
ஆண் : நம் காதல் மாறாதது.....!!!

............... என்னை தாலாட்டும் சங்கீதம் நீ அல்லவா பாடல் மெட்டில் எழுதப்பட்ட வரிகள்
நண்பர் முஹம்மது ஸர்பான் க்கு எனது நன்றிகள் இந்த பாடலை எழுதுமாறு
கேட்டுக்கொண்டதற்க்கும் தொடர் கருத்தில் ஊக்குவித்ததர்க்கும் ............................................

எழுதியவர் : கவி தமிழ் Nishanth (8-Mar-16, 7:22 pm)
பார்வை : 178

மேலே