ரிஷி மூலம்

ஐ. நா. சபையதன் பாதுகாப்புக் கவுன்சிலில்
சைனாவைச் சேர்த்துக் கொள்ளக் கூடினர்
காஷ்மீரம் பிரச்சினையை வாகாய் முடித்திட
பாசாங்கு பேசினர் பாக்கும் சீனாவும்..

இந்தியப் பிரதிநிதி இருக்கை விட்டெழுந்து
சிந்திய மூக்கைக் கைக் குட்டையில் பிடித்து
என்னுரை தன்னை துவக்கு முன்னர்
சின்னதோர் பழங்கதை உங்கட்கு உரைப்பேன்.

காஷ்மீர் எனும் பெயர் காஷ்யப முனிவர்
காஷ்மீர் ஏரியைக் கண்ட அக்கணத்தில்
குளித்திட நல்வாய்ப்பு குதிர்ந்தது என்று
களிப்புடன் ஆடைகள் களைந்து நின்றார்


களைந்த ஆடையை அருகில் பாறை மேல்
விளையும் விபரீதம் அறியாமல் வைத்தவர்
முப்புரி நூலினை மும்முறை மாற்றி பின்
தொப்பென குதித்தார் நீரில் மூழ்கிட

குளிர் நீர் கொடுத்த களிப்பும் உவகையும்
துளிர் விடும் எண்ணம் செயல் வடிவாக்கிட
சாத்திர முழுக்கதனை சாயும் பொழுதினில்
காத்திரம் குளிர்ந்தவர் மேலே எழுந்தார்.


பாறை மேல்வைத்த ஆடை காணாமல்
யாரோ எடுத்தவர் என யோசிக்க
பாகிஸ்தானியன் ஒருவன் திருடி
இருக்கலாம் என்று அத் திசை நோக்க

இந்தியன் கூறிய வாக்கினைக் கேட்ட
பாக் பிரதிநிதி கொதித்து எழுந்தார்.
அப்பொழுது நாங்கள் அங்கு இல்லையே
தப்பான பேச்சிது தயவுடன் நிறுத்தும் .

இது இது இதுதான் எனக்கு வேண்டும்
இப்பொழுது தெளிவாய் புரிந்து இருக்கும்
எப்போதும் இல்லாத பாக்கும் சைனாவும்
இப்போது காஷ்மீர் தமதென்று சொல்வது

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ் (10-Mar-16, 4:24 pm)
பார்வை : 64

மேலே