பெண் மனசு

பாம்பின் பல்லில் பதுக்கிய கனித்துளி
==பச்சை புல்லை உண்ணும் வரிப்புலி
காம்பில் சுரக்கும் பசுவின் விசத்துளி
==கனக்கும் எரிமலை கக்கிடும் பனித்துளி
தாம்பில் தொங்கி தவிக்கும் உயிர்வலி
==தாகம் தீர்த்த சயனைட் விசருசி
நாம்தான் கண்டு வியப்புற பலவழி
==நங்கை மனதோ புரியா படுகுழி!
*மெய்யன் நடராஜ்