ஆதலினால், காதல் செய்யாதீர்

இறக்குமதியான சாதி அமைப்பில்
உருவான சாதிகள் நூற்றுக்கணக்கில்.
தமிழனுக்கு சாதி இல்லை என்பதை அறிந்தும்
இங்கு பல சாதிகளை உருவாக்கிய
சாத்தான்கள் யார் யாரோ நாமறியோம்.
@@@

சாதி என்ற சொல்லே தமிழ்ச் சொல் அல்ல
ஜாதி என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம்
என்பதை அறியாத எழுத்தறிவுள்ளோரும்
தமிழ் நாட்டில் இருப்பதற்கு வாய்ப்பில்லை.
@@@

நம்மவரில் சிறந்தவரைக் கண்டறிந்து
வாய்ப்பளித்து உயர்த்திட எண்ணாமல்
இறக்குமதியான நடிகர்கள் பாடகர்களையே
உச்சத்தில் வைத்துத் துதி பாடும் நமக்கு
இறக்குமதியான பாழும் சாதியமைப்பே
உயர்ந்ததாய்த் தெரிவது சுயநலத்தால்
@@@@@

சாதிகள் இயற்கையின் படைப்பல்ல
இயற்கையில் நிலவுது சமுத்தவமே
இதையறியா மூடர்கள் எவருமில்லை
@@@@@

சாதிக்கொரு குருதியின் வண்ணமில்லை.
எச்சாதியின் நாளத்திலும் சாக்கடை நீர்
ஓடுவதாய் யாருமே கண்டதில்லை.
மனிதராய் இருக்கும் அனைவருக்கும்
குருதியின் வண்ணம் சிவப்பு தானே.
@@@@

உடல் உறுப்புகளும் இயற்கையின் படைப்பினிலே
சாதிக்கு ஏற்றபடி அமையவில்லையே.
செயற்கையான சாதிக்கு மதிப்பளித்து
சாதி வெறி ஆணவத்தில் படுகொலைகள்!
உயிர்களென்ன மலிவான கடைச்சரக்கா?
@@@

தலையிலே பிறந்தவன் எவனுமில்லை
காலில் பிறந்தவனும் எவனுமில்லை.
@@@@
ஆண்டாண்டு காலம் நசுக்கப்பட்டவன்
தாழ்ந்தவன் என்பது உண்மையானால்
நசுக்கி நசுக்கி நல்ல சுகம் கண்டவன்
நல்லவனாய் இருந்திட வாய்ப்பில்லையே!
@@@

இருபத்தியோராம் நூற்றாண்டிலும்
காட்டுமிராண்டித்தைக் கையிலெடுப்பது
ஆறறிவு இல்லார்க்கே உரியசெயல்..
@@@

தமிழனாய்ப் பிறந்ததற்கு பெருமைப்பட்டாலும்
சாதியமைப்புள்ள நாடொன்றில் பிறந்தமைக்கு
வெட்கித் தலைகுனிவார் பகுத்தறிவுள்ளோர்.
@@@

ஆதலினால் இளைஞர்களே,
காதலை காறித் துப்பி ஒதுக்குங்கள்
பின்விளைவை தடுத்திட எவருமில்லை;
அநியாகக் கொலைகளுக்கு ஆளாகாதீர்!
சட்டத்தாலும் அழிக்க முடியாது
பாழாய்ப் போன இந்த சாதிகளை.
ஆதிக்க சாதியினரும் அடங்கமாட்டார்.
@@@

சாதி அமைப்புகளுக்கும் சாதிக் கட்சிகளுக்கும்
தடைபோட எந்த அரசுக்கும் துணிவில்லை.
வாக்கு வங்கியை இழந்திட முன்வருவார் யார்?
@@@@

எந்த சாதிப்பெண்ணும் உயர்ந்தவள் அல்ல
எந்த சாதிப் பெண்ணும் தாழ்ந்தவளுமில்லை.
உயரத்தில் நிறத்தில் அடையாளத்தில்
இயற்கையாய் உள்ளன சிலவேறுபாடுகள்
எல்லா சாதிக்கும் பொருந்துமிவை.
@@@

இறந்த பின்னே சிலமணி நேரத்தில்
துர்நாற்றம் வீசுமிந்த மனித உடல்கள்
சான்றாகும் இயற்கையின் சமத்துவத்துக்கு.
#####
நறுமணம் வீசுகின்ற பிணமாகும் தகுதி
எந்தச் சாதிக்காரனுக்கும் கிடையாது.
@@@

ஆதலினால் காதலைக் காறித் துப்பி
முறைப்படி மணம் கண்டு வாழ்வதற்கு
பெற்றோரின் சொல்படி நடப்பதுடன்
நல்ல வேலையில் சேர்ந்து உயர்ந்திட
அயராது உழைத்து வெற்றி பெறிவீர்.

=
நன்றி : விக்கிபீடியா
Courtesy: Wikipedia
The caste system in India is a system of social stratification[1] which has pre-modern origins, was transformed by the British Raj,[2][3][4][5] and is today the basis of reservation in India. It consists of two different concepts, varnaand jāti, which may be regarded as different levels of analysis of this system.
@@@@
Varna may be translated as "class," and refers to the four social classes which existed in the Vedic society, namely Brahmins, Kshatriyas, Vaishyas and Shudras. Certain groups, now known as Dalits, were historically excluded from the varna system altogether, and are still ostracised as untouchables.
@@@@
Jāti may be translated as caste, and refers to birth. The names of jātis are usually derived from occupations, and considered to be hereditary and endogamous, but this may not always have been the case. The jātis developed in post-Vedic times, possibly from crystallisation of guilds during its feudal era. The jātis are often thought of as belonging to one of the four varnas.
Although the varnas and jatis have pre-modern origins, the caste system as it exists today is the result of developments during the collapse of Mughal era and the British colonial regime in India. The collapse of Mughal era saw the rise of powerful men who associated themselves with kings, priests and ascetics, affirming the regal and martial form of the caste ideal, and it also reshaped many apparently casteless social groups into differentiated caste communities.[12] The British Raj furthered this development, making rigid caste organisation a central mechanism of administration. Between 1860 and 1920, the British segregated Indians by caste, granting administrative jobs and senior appointments only to the upper castes. Social unrest during 1920s led to a change in this policy. From then on, the colonial administration began a policy of positive discrimination by reserving a certain percentage of government jobs for the lower castes.
@@@@
Caste-based differences have also been practiced in other regions and religions in the Indian subcontinent like Nepalese Buddhism, Christianity, Islam, Judaism and Sikhism. It has been challenged by many reformist Hindu movements, Islam, Sikhism, Christianity [17] and also by present-day Indian Buddhism.
@@@
New developments took place after India achieved independence, when the policy of caste-based reservation of jobs was formalised with lists of Scheduled Castes (Dalit) and Scheduled Tribes (Adivasi). Since 1950, the country has enacted many laws and social initiatives to protect and improve the socioeconomic conditions of its lower caste population. These caste classifications for college admission quotas, job reservations and other affirmative action initiatives, according to the Supreme Court of India, are based on heredity and are not changeable.[22][a] Discrimination against lower castes is illegal in India under Article 15 of its constitution, and India tracks violence against Dalits nationwide.

எழுதியவர் : மலர் (15-Mar-16, 5:45 pm)
பார்வை : 137

மேலே