கஜல் 21
உன்னை எண்ண, எண்ண எண்ணத்தில் சுவை ஊறுது
உன்னால் மெல்ல, மெல்ல என்னுள்ளே சுகம் கூடுது
அன்பே உன் நினைவு ஏதோ சக்தியைத் தந்தது
எந்தன் பேச்சு இன்று ஓர் வெற்றிக்கதைக் கூறுது
என் ஸ்வாசம் உனை எனக்குள் கொண்டு செல்கிறது
என்னில் உன் உணர்வு எல்லைத்தாண்டியே சீருது
உன்னில் என்ன உண்டு சொல் கொஞ்சம், உனைக் கண்டிட
ஏக்கம் என்ற காயமே தானாகவே ஆறுது
வார்த்தை வந்து வாழ்த்த, என் பேனா புனைகிண்றது
உன்னைப் பட வேண்டுமென்னும் ஆவலே தீருது
ஊக்கம்பெற்று விட்டதே உன் நட்பினால் என் மதி
நன்மைச் செய்ய நெஞ்சில் ஆசைச் சாரல் தூறுது
தொல்லை யாவுமோட உன் காதல் துணை ஆனது
உன்னைக் காதலிப்பதால் என் வாழ்வு முன்னேறுது