டிக்கெட்
டிக்கெட் பரிசோதகா்:- " ஐயா, டிக்கெட் கொடுங்க"...!
பயணி:- "பஸ் முன்னாடி கண்டக்டா் நிக்கறாரு பாருங்க, அவர்கிட்ட கேளுங்க"!..
பரிசோதகா்:- " என்ன குசும்பா? நான் 'செக்கா்'யா, உங்க 'பயண சீட்'டை காட்டுங்க"!..
பயணி:- "கொஞ்ச முன்னாடி வரைக்கும் அந்த சீட்ல உட்காா்ந்து இருந்தேன், இப்பதான் இந்த சீட் கெடச்சுதுங்க"!
பரிசோதகா்:-(கடுப்புடன் பக்கத்திலிருந்தவர் டிக்கெட்டை காட்டி) " நான் கேக்கறது இந்த டிக்கெட்டைய்யா"...!
பயணி:- " இதுவா.!.. கண்டக்டர் எனக்கு டிக்கெட் எடுக்க வேணாமுன்னு சொல்லிட்டாா்"!..
பாிசோதகா்:- "என்னய்யா சொல்றே, ஏன் வேணாமுன்னு சொன்னார்"...?
பயணி:- " அவா்தான குழந்தைங்களுக்கு டிக்கெட் எடுக்க வேணாமுன்னு சொன்னாா்... என் பேருகூட "குழந்தை"தாங்க"!
பாிசோதகா்:-?????????!!!!