உவமையில் ஓர்கவிதை நான்நினைக்க
உவமையில் ஓர்கவிதை நான்நினைக்க உன்சீர்
உதட்டினில் புன்னகை மெல்ல தவழ்ந்தது
புன்னகைக்கு ஓர்கவிதை நான்நினைக் கும்போது
என்னுள்ளே வண்ணச் சிறகு .
----கவின் சாரலன்
இன்னிசை வெண்பா .
பயிலுக முயலுக . கவிஞன் எனும் பெருமை அடைக .
கவிப்பிரிய டாக்டர் கன்னியப்பன் விருப்பத்திற்காக ....
இரு விகற்ப நேரிசை வெண்பாவாக
உவமையில் ஓர்கவிதை நான்நினைக்க உன்சீர்
பவளயிதழ் மெல்ல விரிய - தவழ்ந்திடும்
புன்னகைக்கு ஓர்கவிதை நான்நினைக் கும்போது
என்னுள்ளே வண்ணச் சிறகு .
----கவின் சாரலன்