நாங்கள் காதலர்கள்
..."" நாங்கள் காதலர்கள் ""...
காத்திருக்கும் காலமும்
ஏக்கத்தின் தவிப்பும்
பூக்களின் மொழியும்
மெளனத்தின் அர்த்தமும்
வித்தியாச விளையாட்டாய்
கண்களை திறந்தவாறே
கண்ணாமூச்சி ஆட்டம் ,,,,
இருண்ட உலகத்தின்
மின்மினி பூச்சிகளாய்
இருகரங்கள் இணைத்தே
இன்பமெனும் கதைபேசி
புன்னகைக்கும் பூக்களாய்
தோளில் சாய்ந்தவாறே
தொலைதூரத்து பயணம் ,,,
அன்பு தொல்லைகள் சகித்து
ஆசைகளையும் பகிர்ந்து
துன்பத்தில் தோள்கொடுத்து
அடங்கியும் அடக்கியும்
அனுசரித்து அகிம்சை வழி
ஆயுதத்தின் யுத்தங்களோடு
தொடுவானத்தை நோக்கியே,,
கடற்கரையோரமாய் ஒரு
காதலும் ஈருயிர்களும்
சத்தமிட்டே முத்தமிடும்
சளைக்காத அலைபோல
கைபிடித்தே வாழ்க்கைக்குள்
கடந்துவந்தும் காதலிக்கிறது
தம்பதியென பெயர்மாற்றி ,,,
என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...