ஊரறியா ஓரரிய ஆன்மீக‌த் தகவல்

இராவணனுக்கு முன்பே சீதையை, கடத்திய‌ அரக்க‍ன் யார் தெரியுமா? – ஊரறியா ஓரரிய ஆன்மீக‌த் தகவல்

என்ன‍து இராவணனுக்கும் முன்பே சீதையை கடத்திய அரக்க‍னா? என்ன‍ இது புதுசா இருக்கே என்று ஆச்ச‍ரியத்துடன் நம்புவதா வேண்டாமா என்ற குழப்பத்திற்கு ஆளாகியிருப்ப‍து தெரிகிறது. நான் சொல்வது முற்றிலும் உண்மை. இராவணனுக்கு முன்பே சீதையை, கடத்திய‌ அரக்க‍னும் அந்த அரக்க‍னிடம் இருந்து

ராம லஷ்மணனும்! சீதையைபோரிட்டு காப்பாற்றிய அரியநிகழ்வு ஒன்று கம்பராமாயரணத்தில் வருகிறது. கூனி எனும் மந்தரையின் கைப்பாவை யாக இருந்துசெயல்பட்ட‍ கைகேயின் சூழ்ச்சியால் ராமர், தன் மனைவி சீதாவுடனும் தம்பி லஷ்மணன டனும் கான கம் சென்றுவிட்ட சேதிஅறிந்து பரதன், மீளாதுயர்கொண் டு, கானகம் புறப்பட்டான். எதற்கு? அவர்களை சமாதானப்படுத்தி அழைத்து வந்து அண்ண‍னை அரியணையில் அமர வைத்து அழகு பார்ப்ப‍தற்காக. . .

ஆனால் மிகுந்த நம்பிக்கையோடு கானகம் வந்த பரதனின் வேண்டுகோளையும் ஏற்க மறுத்து, தான் தொடர்ந்து கானகத்தி லேயே இருந்து தாய் கைகேயியின் உத்த‍ரவுபடி வனவாசம் முடித்து நாடு திரும்புகிறேன் என்று பரதனிடம் இராமர் கண் டிப்பாக சொல்லவிட, தன் வேண்டுகோளுக்கு அண்ண‍ன் செவி மடுக்க‍ வில்லையே என்ற ஏமாற்ற‍த்தோடும், பெருந்துயர்கொண்டவனாய் இரா மனிடம் தனது கடைசி வேண்டுகோளை வைத்தான். அது இராமரின் பாது கைகளை தருமாறு வேண்டினான், இராமனும் சம்ம‍தித்து, தன் பாதுகை களை கொடுக்க‍, அப்பாதுகைகளை தன் சிரத்தின்மீது வைத்து மிகுந்த பய பக்தியுடன் நாடு திரும்பி, அரியணையில் இராமரின் பாதுகைகளை வைத்து பூஜித்து, அரசாண்டான். அதன் பிறகு இராமர், சீதை, லக்ஷ்மணர் மூவரும் தண்ட காரண்யம் என்ற இடத்திற்கு வந்தனர். அங்கு ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்து ஓய்வெடுத்த‍னர்.

அப்போது அங்கே பிரம்மனிடம் சாகா வரம் பெற்ற‍ ஒரு அரக்க‍ன் அவன் பெயர் விராதன் என்பதாகும். அவன் பல்லாயிரம் யானைகளின் பலத்தை ஒருங்கே பெற்ற‍வன். மிகுந்த பலம் கொண்டவன், இவனது குரலுக்கு அண்ட சராசரங்களும் அஞ்சி நடுநடுங்கி போகும். அப்பேற்பட்ட‍ பலம் கொண்ட அரக்க‍ன் அவன் பெயர் விராதன் அங்கு வருகிறான்.

இராமர், சீதை, லஷ்மணர் மூவரையும் பார்க்கிறான். சீதையி ன் அழகில் மயங்குகிறான். சீதையை அடையவேண்டும் என்ற நோக்க‍த்தில் சீதையின் அருகில் வருகிறான். வந்தவன் ஒரே விநாடியில் சீதையை தன் ஒரு கையால் அள்ளிக் கொண்டு ஆகாய மார்க்கத்தில் பறக்க‌த் தொடங்குகிறான். இதனை சற்று ம் எதிர்பாராத ராமரும் லஷ்ணனும் செய்வதறியாது திகைத்த னர். பின் இராமலஷ்மண‌ருக்கு கோபம் பொங்கியது. விராதனுக்கு எச்ச‍ரி க்கை விடுக்கும் வகையில் கடுமையாக திட்டிபேசினர். ஆனா ல் அவனோ இவர்களின் எச்ச‍ரிக்கையையும், சீதையின் கதறலையும் பொருட்படுத்த வில்லை.

இருவருக்கும் வாய்ப்போர் முடிந்து, வில்போர் ஆரம்பித்த‍து. விராதனின் அம்புகள் உட்பட பிற ஆயுதங்களை, இராமர் தனது அம்புகளால் பொடிப் பொடியாக செய்கிறார். இதனால் பெரும்கோபம்கொண்ட அரக்க‍ன் மலை களை எறிந்தான். இராமனோ தனது வாளினால் அம்மலைகளை அவ ன்மீதே விழச்செய்தார். அவ்வ‍ரக்க‍னுக்கு இன்னும் கோபம் கொந்தளிக்க‍ மிகவும் கடுமையாக இராமரிடம் கடுமையாக‌ மோதினான். என்ன‍தான் மோதினாலும் இராம லஷ்மணரை வீழ்த்த‍ அவனால் முடியவில்லை.

அதன்பிறகு இராமரின் அம்புகள் அவ்வ‍ரக்க‍னின் உடலை சல்ல‍டையாக தாக்கியன• இவ்வ‍ரக்க‍னை எவராலும் வீழ்த்த‍ முடியாது காரணம் பிரம் மனிடம் இவன் சாகா வரம் பெற்ற‍வனாயிற்றே! இதனால் இராமரும் லஷ்மணரும் தங்களது உடைவாளை எடுத்து அவ்வ‍ரக்க‍னின் தோள்கள் இரண்டையும் தங்கள் வாள்களால் வெட்டி வீழ்த்தினர். கரங்கள் இழந்த பின்ன‍ரும் அவ்வ‍ரக்க‍ன் அப்போதும் கோபத்துடன் இராமரையும் லஷ்ம ணரையும் தாக்குவதற்கு ஓடிவர, இராமன் “லக்ஷ்மணா! இவனை பூமிக் கடியில் புதைத்துவிடுவோம்” என்று சொல்லி காலால்உதைக்க, அவன் போய் ஓர் ஆற்றங்கரையிலிருந்த ஒரு பெரிய பள்ளத்தில் வீழ்ந்துபுதைந் து போனான்.

அதுவரை அரக்க‍னாக இருந்து வந்த விராதன் அழகிய ஒரு கந்தர்வனாக உருமாறினான். இந் த காட்சியைபார்த்த‍ ராமரும் லஷ்மணரும், அந் த கந்தர்வனிடம் விவரம் கேட்டார்கள். அதற்கு அந்த கந்தர்வன், தான்செய்த பெரிய தவறுக்கு குபேரன் சாபம் இட்டார். என் தவறை உணர்ந்து, அவரிடம் சாபவிமோசனம் கேட்டேன். அச்சாபத் தின்படியே நான் கொடிய அரக்கப் பிறவி எடுத்தேன். மேலும் ஸ்ரீராமரான தங்களின் காலால் உதைபட்டதும் அச்சாபம் முழுக்க நீங்கி என்னுடைய பழைய கந்தர்வ உடல் கிடைக்கப்பெற்றேன். என்றுசொல்லி கானகத்தில் இருந்து வானுலகம் சென்று மறைந்தான். இராமர், சீதை, லஷ்மணரும் ஆகியோர் தங்களது பயணத்தை தொடங்கினர்

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு முகநூல்) (19-Mar-16, 11:48 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 167

மேலே