பொய்க்கால் குதிரை
நான் ராஜா வந்தேன் ராஜா வந்தேன் ராஜா வந்தேனே
நம்ம நாட்டுமக்கள் நெலமையப் பார்க்க நகர்வலம் வந்தேனே
நான் ராணி வந்தேன் ராணி வந்தேன் ராணி வந்தேனே
என் ராஜா உங்க துணையாத் தானே நானும் வந்தேனே
போலாம் போலாம் குதிரையேறி வாவா வாவா என் ராணி
வந்தேன் வந்தேன் குதிரையேறி உங்க கூட என் ராஜா
தை தை தை தை பறந்து போவோம்
ஹை ஹை ஹை ஹை விரைந்து போவோம்
ராஜா: வறுமையில் மக்கள் வாடுறாங்க
ராணி: பிச்சையும் சாலையில் எடுக்கிறாங்க
ராஜா: ஒருத்தர ஒருத்தர் திட்டிக்கிறாங்க
ராணி: அங்க பாருங்க வெட்டிக்கிறாங்க
ராஜா: கொள்ளைக் கூட்டம் ஒருபக்கம்
ராணி: கொட்டாவிக் கூட்டம் மறுபக்கம்
ராஜா: போலிப் பகட்டு ஒருபக்கம்
ராணி: போதையில் மெதப்பவன் மறுபக்கம்
ராஜா: இது நாடா நாடா சொல் ராணி
ராணி: ஐயோ பயந்து வருது என் ராஜா
தை தை தை தை தை தை தை தை
ஹை ஹை ஹை ஹை ஹை ஹை ஹை ஹை
ராஜா: காவலின் பக்கம் கையூட்டு
ராணி: நீதிக்கு நிறைய பொய்யூட்டு
ராஜா: மேனா மினுக்கிகள் நெறையபேர்
ராணி: குற்றத்தில் குளிப்பவன் நெறையபேர்
ராஜா: பாவம் குழந்தைகள் வழிகாட்டலின்றி
ராணி: மரங்களும் அழுகுது உறவுயின்றி
ராஜா: வெளிப்புற உலகில் துர்நாற்றம்
ராணி: மனசோ கிடக்குது சகதியாட்டம்
ராஜா: இது நாடா நாடா சொல் ராணி
ராணி: ஐயோ பயந்து வருது என் ராஜா
தை தை தை தை தை தை தை தை
ஹை ஹை ஹை ஹை ஹை ஹை ஹை ஹை
நான் ராஜா நொந்தேன் ராஜா நொந்தேன் ராஜா நொந்தேனே...
நம்ம அரணமனை நோக்கி திரும்பி போக முடிவு எடுத்தேனே...
நான் ராணி கூட நாட்டப்பார்த்தே மிகவும் நொந்தேனே..
இந்த நாட்டப்பார்த்து மனசு குழம்ப முழுதாய் நொந்தேனே..
இந்த நாட்டத்திருத்த வழியில்லையா...
கொஞ்சம் உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்களே...