பணக்கார வீட்டு பங்களா நாய்

நான் ஒரு உயர்சாதி நாய்,
பணக்கார வீட்டு பங்களா நாய்,
கடற்கரையில் துள்ளித் திரிவேன்,
எசமான் வீட்டுக் குழந்தைகளுடன்!
கடற்கரையில், நீரில்
பறந்து செல்லும் பறவையைப் பார்த்து
பாய்ந்து சென்று பயம் காட்டிடுவேன்,
குரைத்து குரைத்து விரட்டிடுவேன்!
எனக்கு பேசும் சக்தி இருந்தால்
கடலுக்குள் பந்தை எறியச் செய்வேன்,
விரைந்து நீந்தி கவ்வி எடுத்து
துள்ளிக் குதிப்பேன்!
எனக்கு சொன்னால் போதும்,
எவ்வளவு தூரம் எறிந்தாலும்
எம்பித் தாவி எடுத்து வந்து
வாலைக் குழைத்து நிற்பேன்!
ஓடி ஆடி அலுத்த போது
எசமானுடன் நடை பயின்று
அங்குமிங்கும் இழுக்காமல்
சமர்த்தாய் வீடு சென்றிடுவேன்!
நாயேன் என்னைக் கேட்டால்,
பணக்கார வீட்டு பங்களா நாயாய்
கடற்கரையில் துள்ளித் திரிவது
எனக்கு இன்பம்! என்றும் இன்பம்!!