கண்ணப்பன் என்றே

கண்ணப்பன் என்ற சொல்வோம் அவனை
கண்கள் அலைபாய்வதால்

கண்ணப்பன் என்று கொள்வோம் அவனை
காலத்தையே கைக் கொள்வதால்


கண்ணப்பன் என்று அறிவோம் அவனை
தான் கண்டதே கோலம் என்பதால் .

கண்ணப்பன் என்று தெளிவோம் அவனை
கடுப்புடன் எதையும் நோக்குவதால் .


கண்ணப்பன் என்று சொல்லுவோம் அவனை
கலக்குவதே குறிக்கோளாக .


கண்ணப்பன் என்றே அழைப்போம் அவனை
கண் சிமிட்டி கையை ஊதுவதால் .


கண்ணப்பன் என்றே சிலாகிப்போம் அவனை
களமிறங்கி குறை காண்பதால் .


கண்ணப்பன் என்றே போற்றுவோம் அவனை
கண்களிலே ஆத்திரத்தைக் காட்டுவதால்.


கண்ணப்பன் என்றே நினைப்போம் அவனை
கண்ணிலே களங்கமும் வன்மமும் நிற்பதால்

கண்ணப்பன் என்று பெற்றோர் இட்டப் பெயர்
இன்று காரணப் பெயராக நிலைப்பதால்.

கண்ணப்பன் வாழ்கிறான் பெயருக்கேற்ப


அளவான வளத்தோடு
குறைவான உயரத்தோடு
அதிகமான குரோதத்தோடு

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (29-Mar-16, 4:44 pm)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 207

மேலே