ஆழ்கடலின் துரும்பாய் தேடல்கள் 555

தேடல்...

வாழ்வெனும் மாயைக்குள்
மனமெனும் மயக்கத்தில்...

ஆழ்கடலில் துரும்பாய்
அலைமோதும் நம் தேடல்கள்...

சலிப்பிற்கும் சந்தோஷத்திற்கும்
இடையில் பாலமிட்டு...

அளவில்லா ஆசைகளுக்கு எல்லாம்
ஆனந்த கனவுகண்டு...

ஆர்பரிக்கும் நம் தேடல்கள்...

இருக்கின்ற
எதையும் எடுக்காமல்...

இல்லாத ஒன்றுக்காய்
வானுக்கும் மண்ணுக்கும்...

நம் தேடல்கள்
எதுவரையில்...

மனிதராக பிறப்பது
வரம் என்கிறார்கள்...

தேடலிலே ஆயுள்
முடிந்துவிடுகிறது...

மனிதன் இன்று
வாழ்வது எங்கே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (29-Mar-16, 8:15 pm)
பார்வை : 91

மேலே