கேவல்நாத் _ ஏக்நாத்

கேவல்நாத் _ ஏக்நாத்


==
அண்ணே நா பல வருசம் கழிச்சு உங்களைப் பாக்க வந்திருக்கறேன். உங்களுக்கு ரட்டப் பசங்க இருக்கறாதா கேள்விப்பட்டேன். அவுங்க எங்கண்ணே?
==
அவுங்க ரண்டு பேரும் வெளையாடப் போயிருக்கறாங்கடா தம்பி.
==
சரி அண்ணே. அவுங்க பேரு என்ன?
==
மூத்தவம் பெரு கேவல்நாத். எளையவம் பேரு ஏக் நாத்.
==
என்னண்ணே ரண்டு பசங்களுக்கும் இந்திப் பேர வச்சிருக்கீங்க? நாந்தான் அம்மா அப்பாகிட்டக் கோவிச்சிட்டு எனக்கு 12 வயசு ஆகற போதே பம்பாய்க்கு ஓடிப் போயிட்டேன். அங்கயே ஒரு தமிழ்ப் பொண்ணக் கல்யாணம் பண்ணீட்டன். எங்களுக்கு ஒரு பையன் இருக்கறான். அவம் பேரு தமிழருவி. பம்பாய்லே இருக்கற நானே வேற மொழிப் பேர எம் பையனுக்கு வச்சாக் கேவலமா இருக்கும்னு அழகான தமிழ்ப் பேரா வச்சிருக்கேன். நீங்க தமிழ் வளர்த்த மதுரையிலே வாழ்ந்திட்டு பெத்த பசங்களுக்கு இந்திப் பேர வச்சிருக்கீங்களே?
====
என்னடா செய்யறது தம்பி. தமிழ் ஆசிரியருங்க தமிழ்ப் பேராசிரியர்களிலெ கூட 98% பேர் அவுங்க பிள்ளைங்களுக்கு இந்திப் பேர வைக்கறது தான் கவுரவம்னு நெனைக்கறாங்க. நா எட்டாம் வகுப்பே தேர்ச்சி பெறாம நம்ம அப்பா வச்சுக்கொடுத்த மளிகைக் கடையைப் பாத்துட்டு இருக்கறேன். எனக்கு என்ன தெரியும்? ஒரு படிச்ச மனுசங்கிட்டத் தான் பசங்களுக்கு நல்ல இந்திப் பேருங்களச் சொல்லச் சொன்னேன். அவுரு தான் இந்தப் பேருங்களச் சொன்னாரு.
=====
என்ன செய்யறதண்ணே. தமிழ் நாட்டையே திரை ரசனை ஆட்டிப் படச்சிட்டு இருக்குது. உலகத்திலேயே ஒரு சினிமா நடிகரை முதல் அமைச்சர் ஆக்கி வரலாறு படைச்சவங்களாச்சே தமிழர்கள். இன்னமும் (நாவலாசிரியர் காலஞ் சென்ற சுஜாதா அவர்கள் சொன்ன) அந்தச் சினிமாங்கற ”கனவுத் தொழிற் சாலை”யிலே தானே தமிழகமே மூழ்கிக் கெடக்குது. கைலாயத்திலே இருந்து அந்த சிவனே வந்தாலும் தமிழர்களை மாத்தி நல்வழிப்படுத்த முடியாதண்ணே.

==

Kewal = Only केवल கேவல் = ஒரே ஒரு, மட்டும்
Nath = Lord = கடவுள், அரசன், உயர்ந்த அதிகாரிக்களுக்கு கொடுக்கப்படும் சிறப்புப் பட்டம்.
एकनाथ = ஏக்நாத் Poet, Saint = கவிஞர், புலவர், அருட் தொண்டர், புனிதமான
=
சிந்திக்க. மொழிப் பற்றையும், மொழி சார்ந்த இனப்பற்றையும் வளர்க்க. பிற மொழிப் பெயர்களின் பொருள் அறிய.

எழுதியவர் : மலர் (31-Mar-16, 10:49 pm)
பார்வை : 105

மேலே