இயன்றவரை இயற்றுகிறேன்

நீர் மேல்
எழுதிய எழுத்து
நிற்காது
நாம் எழுதும்
நற்கருத்துகள் கூட
அப்படியே
ஏற்க இயலாதவர்கள்
என்றைக்கும் ஏற்க
போவதுமில்லை
மற்றவர்க்கு நாம்
சொல்ல வேண்டிய
அவசியமே இல்லை
ஆயினும் எழுதுகிறேன்
அழகினை வடிக்கவும்
விரும்புகிறேன் கவிதைகளில்
இயற்கையை வருணிக்கவும்
காக்கவும் விரும்புகிறேன்
அதனால் இயன்றவரை
இயற்றுகிறேன் கவிதைகளை
நிதர்சனத்தை சொல்ல
இலக்கண இலக்கிய அறிவு
என்னிடமில்லை
எளிய வார்த்தைகளில்
எழுதுகிறேன்

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (6-Apr-16, 3:47 pm)
பார்வை : 138

மேலே