நிலவின் கவிதைகள் இறுதி பக்கம் -04 --முஹம்மத் ஸர்பான்

அஸ்தமனத்தின் பின் சந்ரோதயம் நீ
சில பூக்கள் மொட்டவிழும் ரகசியம் நீ
காகிதக்காரன் மை எடுக்கும் கற்பனை நீ
ஓவியனும் இலக்கணம் கற்கும் புத்தகம் நீ
வெள்ளை வண்ணத்தில் புன்னகைக்கும் பூவும் நீ
-இப்படிக்கு வான் நிலா-

நடுநிசியில் தூங்காமல் விழித்திருக்கும் சந்திரனே!
உன்னழகு எத்தனை பெண்களின் மந்திரம்
உலகம் சுழலும் வரை உன்னை ரசிப்பவன்
பிறந்து கொண்ட இருப்பான்..ஏழு ஜென்மங்களும்

வெண்ணிலவே! என் முகத்தை கொஞ்சம் பார்
உன்னொளியில் சுடரிடும் நிழல்களை பார்
திமிரு பிடித்த பெண்களும் உன்னால் தான்
அழகு எனும் சிறையில் ஆயுள் கைதியாகின்றனர்.

நீ தரையில் ஒரு நாள் இறங்கி நடந்தால்
ஐவகை நிலங்களும் உன்னை நேசிக்கும்
மொழிகளின் உச்சரிப்பில் கவிதைகள் வாசிக்கப்படும்
விழிகளின் இமையாத பார்வையால் அழகும் யாசகமாகும்.

என் பிச்சைப் பாத்திரத்தில் விழுகின்ற யாசகத்தின்
வெளிச்சம் நீ என்பதால் என் பசி கூட நிலவே!
உன்னை ரசிப்பதால் வயிறாற ஏப்பம் விடுகிறது

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (8-Apr-16, 11:54 am)
பார்வை : 186

மேலே