வாக்களிப்போம் வாக்களிப்போம் 2016

வாக்களிப்போம்
வாக்களிப்போம்
பதினெட்டு வயது
இளைஞர்கள் முதல்
நூறு வயது தாண்டிய
முதியவர்கள் வரை
தவறாமல்
வாக்களிப்போம் !
தவறுகள் செய்யும்
அரசியல் வாதிகளை
புறகணிப்போம் !
தன்னை
மறந்துக்கூட
தவறுகள் செய்யாத
அரசியல் தலைவர்களை
ஆதரிப்போம் !
வரும் தேர்தலில்
பணத்திற்கு
நம் வாக்கை
விற்கமாட்டோமென
சூளுரைப்போம் !
இழந்துபோன
நம் தன்மானத்தை
மீண்டும்
மீட்டெடுப்போம் !
நூறு சதவிதம்
வாக்களித்து
புது சரித்திரம்
படைப்போம் !
ஊழல்
சுவர்களை
நேர்மை உளிக்கொண்டு
துளைத்து
உடைப்போம் !
வாருங்கள்
என் மக்களே
வாக்களிப்போம் !
வாக்களிப்போம் !

எழுதியவர் : சூரியன் வேதா (8-Apr-16, 9:41 pm)
சேர்த்தது : சூரியன்வேதா
பார்வை : 255

மேலே