விண்ணையும் ஆள்வாய் வென்று
ஒன்றுமில்லாதவன் என்று ஒதுக்கிவைக்காதே
எதற்கும் லாயக்கில்லையென்று தள்ளிவைக்காதே
செல்வமில்லாதவன் என்றும் ஒதுங்கிச்செல்லாதே
பாவப்பட்டவன் இவனென்று புரளிசொல்லாதே....
எங்களின் மத்தியிலும் திறமை உண்டு
எங்களின் குடிசையிலும் அறிவு உண்டு
நாங்களும் ஜெயிக்கத் தானே பிறப்பெடுத்தோம்
விண்ணையும் ஆளத் தானே உருவெடுத்தோம்..
திறமை எங்கிருந்தாலும் வெளிப்படுமே
ஏழ்மை தடுத்திட்டாலும் ஜெயித்திடுமே
மண்ணுக்குள் தள்ளிட்டாலும் மரமாகி எழுந்திடுமே
தண்ணீரில் மூழ்கடித்தாலும் முத்தெடுத்தே மேல்வருமே
அன்று தடுத்திட்டார் முடியாது என்று
நேற்று மறுத்திட்டார் வறுமை கண்டு
இன்று வாழ்த்திட்டார் திறமை கண்டு
நாளை விண்ணையும் ஆள்வாய் வென்று