தினம் ஒரு காதல் தாலாட்டு - பாடல் - 70
பால் இரவிலோர் பாட்டு
பாடுகிறேன் பருவத்தைக் கேட்டு
வைகறையில் மலர்ந்த மொட்டு
தலையணை மந்திரம் போட்டு
நடத்துது நடத்துது இன்ப நாடகம்
படிக்குது படிக்குது காமன் புத்தகம்
உறவு நல்ல உறவு
நம் மனசுக்கேத்த உறவு
நமக்கு அமைந்த பிறகு
அது தெய்வீக உறவு..!
அறிவு ஆறு அறிவு - இது
மனுசனோட அறிய வரவு !
மற்ற உயிரிணங்களுக்கு..
நிச்சயம் ஓரறிவு குறைவு…!
வானில் சிறகடிக்கும் கருமேகங்கள்
மழைதானம் செய்யுது பூமியில்
பயிர்கள் விளையும் செங்காடுகள்
உலக உயிர்களின் பசியாற்றுங்கள்..!
ஆசை அளவில்லா ஆசை
அதை அடக்காவிட்டால் கொடுமை
நடப்பதென்னவோ உண்மை
நாம் மனசலனத்துக்கு அடிமை..!
ஓசை கடல் ஓசை
ஓய்வில்லாத ஓசை
உலகெங்கும் ஒரே சுதியில்
கலந்து பாடும் பாஷை…!
மேகங்கள் மோகங்கள் உரைக்குது வானிலே
காகங்கள் தேகங்கள் கரைக்குது நீரீனிலே
மழை வரும் நேரமிது – மஞ்சமேற தயாராய் இரு.
உன் செல்லக்கிளி கனிகொய்து மன்னவனே பசியாறு.!