இந்த பொண்ணுங்களே இப்டி தான்

சமஞ்சி என்ன சமைக்கிறாளே
மச்சி
சமயம் பாத்து
கவுக்குகிறாளே

வேட்டைகாரனா வந்து நின்னேனே
என்ன வெட்டி பயனு சொல்லிபுட்டாளே

தொரத்தி (துரத்தி ) தொரத்தி காதலிச்சேன்டா
என்ன தெருநாய்யுனு
வஞ்சிபுட்டாடா

அஞ்சு மணிக்கு கோவில் போனேன்டா
வஞ்சி அவள பாக்க போனேன்டா
வஞ்சி அவள காணவில்லடா
அஞ்சி அஞ்சி தேடி
அலஞ்சிட்ருந்தேன்டா
கொஞ்சி கொஞ்சி பேசிகிட்ருந்தாடா
தனியா...

என்னதானு பாக்கபோனேன்டா
என்ன தானே பாத்துட்டேன்டா

படமா
கவியா
உயிரா
தானேனா...
தானே(நா)னா

நடிப்புடா மச்சி
இத்தன நாளும்
நடிச்சிருக்காடா மச்சி


~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (11-Apr-16, 8:45 pm)
பார்வை : 107

மேலே