சொல்லாமல் பிரிந்தவள்

அன்புக்கு பாலமிட்ட உறவு
அழகுக்கு வண்ணமிட்ட பொலிவு
கவலைக்கு வித்திட்ட பிரிவு
எல்லாம் அவள் காதல்

நாளெல்லாம் காதல் சொல்லியவள்
உதடாளும் கண்ணாலும் நெஞ்சை குத்தியவள்
இன்று துரோகத்தால் முதுகில் குத்தியவள்
பூவென தேனென வர்ணித்தவனை
தீயென சுட்ட சுடர்விழி அவள்

ஆயிரம் காரணம் பிரிவுக்கு இருந்தும்
ஒரு காரணமும் சொல்லாமல் பிரிந்தவள்
இல்லை என்னுயிரை என்னிலிருந்து பிரித்தவள்

எழுதியவர் : கவி தமிழ் நிஷாந்த் (11-Apr-16, 10:17 pm)
பார்வை : 151

மேலே