10 செகண்ட் கதைகள் - தரகு
"என்னய்யா, விசாரிச்சு பார்த்ததில பொண்ணோட அப்பா மகா கஞ்சனாமில்ல?"
என்றார் பையனோட அப்பா.
"எல்லாரும் நம்மள மாதிரி இருந்தா பரவாயில்லைங்களே"
என்று நமட்டு சிரிப்பு சிரித்த தரகரிடம் பணத்தை கொடுத்து விட்டு பெருமையுடன் பேராசைப்பட்டார், "'நல்ல' இடமா பாருய்யா?"
"ஆகட்டுங்க, அது தானே நம்ம வேலை?"