தினம் ஒரு காதல் தாலாட்டு - பாடல் - 76
அன்பு என்னும் பேனாவில்
ஆசை என்னும் மையூற்றி
காதல் என்னும் கட்டுரையை
எழுதுகிறேன் கவி வடிவில்…!
ஏற்க வேணும் என் உயிரே
இரவும் பகலும் உன் நினைவே
பார்க்க வேணும் என் முகத்தை
காதல் வடியும் கோமளத்தை…!
ஈடெடுத்து எழுதுகிறேன்
எழுத முடியாமல் தவிக்கிறேன்
ஏடெடுத்துப் போகிறேன்
எழுதிடாமல் திரும்புகிறேன்
காண வேண்டி துடிக்கிறேன்
காணாது கண்ணீர் வடிக்கிறேன்
கால் கடுக்க நிற்கிறேன்
காலம் கழிவதை வெறுக்கிறேன்
விரைந்து வரவேண்டுமென நினைக்கிறேன் - நீ
வரும் வழியில் பூக்கள் தெளிக்கிறேன்
காதல் மருந்து தரவேண்டுமென நினைக்கிறேன்
காம போதையில் என்னையே மெய்மறக்கிறேன்
கெட்ட பழக்கங்கள் எனக்கில்லை
கெடுக்கும் புத்தியும் துளியுமில்லை..
வெட்டி பேச்சுகள் பிடிப்பதில்லை
வேலைக்கு செல்வதில் சுனக்கமில்லை
கூத்தியை தேடி செல்வதில்லை
கூட இருந்தே குழி பறிப்பதில்லை
ஜாதி மதங்கள் பார்ப்பதில்லை
காசு பணங்கள் கேட்பதில்லை
என்னிடம் உள்ள நற்குணங்களை
நான் என்றைக்கும் தவற விடமாட்டேன்
உன்னை தஞ்சம் அடைவதற்கு
இதைவிட என்ன வேண்டும் சொல் அன்பே..!