தமிழ்

நான் மறந்து போவேனென்று நினைத்தாயோ மானிடா...!!!
மதி கேட்டும் மறக்க மாட்டேனடா
நான் இழந்து போவேனென்று நினைத்தாயோ மானிடா...!!!
இழி செயலிலும் இழக்க மாட்டேனடா
நான் துவண்டு போனேனென்று நினைத்தாயோ மானிடா ...!!!
துணிந்து நிற்க நான் தயங்க மாட்டேனடா
நான் தூங்கி விட்டேன் என்று நினைத்தாயோ மானிடா...!!!
தூக்கத்திலும் இமை மூடாதடா
நான் மௌனித்து போனேனென்று நினைத்தாயோ மானிடா...!!!
மௌனத்திலும் உதடு அசயுமடா
நான் பேச மாட்டேனென்று நினைத்தாயோ மானிடா...!!!
ஒவ்வொரு பேச்சும் முத்துத் தமிழடா
நான் இறந்து போவேனென்று நினைத்தாயோ மானிடா...!!!
இறந்தாலும் இறக்காதடா இந்த இன்பத் தமிழ்....


---மனிதா நான் தமிழனடா---
---ராஜ் குமார்---

எழுதியவர் : ராஜ்குமார் (14-Apr-16, 11:09 pm)
Tanglish : thamizh
பார்வை : 145

மேலே