தினம் ஒரு காதல் தாலாட்டு - ஜோடி பாடல் 2 9 = 77

“தாவணிப் பூவே ! தாவணிப் பூவே..!!
ஆவணி மாசம் கல்யாணம் !
பூந்தேரில் போவோம் ஊர்கோலம்
அந்தி சாய்ந்தால் அமர்க்களம் !”

பட்டுப்புடவை கட்டிக்கிட்டு
பால்குடுவை ஏந்திக்கிட்டு
பாதமலரை வணங்கிவிட்டு
பருவ விருந்தில் கலந்துக்கொள்வேன் !


உள்ளமென்னும் பள்ளத்தில்
எண்ணிலடங்கா எண்ணங்கள்
நல்லதையே எண்ணிவந்தால்
என்றுமில்லை துன்பங்கள் !


வாழ்க்கை என்னும் பாத்திரம்
வருணன் வகுத்த சூத்திரம்
யார் யாருக்கு எது எதுவோ
அதுதானே சாத்தியம் !


தொப்புள் கீழே கப்பல்விட்டு
அப்பனாகப் போகிறேன்
அப்பனான சேதிவந்தால்
நிப்பல் வாங்கி வருகிறேன் !

அப்பப்போ கப்பல்விட்டால்
தொப்புளுக்கு ஆகாது
சப்பையாகிப் போனாலும்
சலிப்பு தட்டக் கூடாது

உருக்கி வடித்த எஃகு
எளிதில் இளகாது
கிறுக்குத்தனமா பேசாதே
மாமன் மனம் தாங்காது !

உன் உத்தம வார்த்தைகள்
வேலைக்கு ஆகாது
என் சுத்தமுள்ள அத்தானே
சுகம் ஒரு பலி ஆடு !

எழுதியவர் : சாய்மாறன் (15-Apr-16, 9:17 pm)
பார்வை : 61

மேலே