ப்ரியத்துக்குரிய கைதி

உன் சேலையை
சப்பிக்கொண்டே
தூங்கும்
இரவுகள்தானே
புனிதமானவை!

இல்லையெனிலும்
இருப்பதாய்
உணர்த்தும்
உன் முகம்தானே
போற்றத்தக்கது!

அதட்டாதபோதும்
அழவைத்தே
திருத்தும் உன்
சாமர்த்தியம்தானே
வியக்கத்தக்கது!

அசம்பாவிதம்
நிகழும்முன்னே
குறிகளறியும்
நீதானே
தீர்க்கதரசி!

உன் அருகாமையின்
சல்லடைகளுக்கே
என் ஏகாந்தத்தை
பொத்தல்செய்கிறேன்

ரகசியமாய்
கொடுத்தனுப்பும்
கடதாசியில்_அடுத்த
கடதாசிக்கெனும்
ஏக்கத்தை
அதிகப்படுத்துகிறேன்

சலவைசெய்யா
சந்தோசத்தின்
உறைவி(டுதி)டத்தை
இருப்பிடமாய்
தந்தவளே

என் தந்தையின்
பெயருக்கு_என்
நன்பனொருவனும்
மகன்!
உன் ஏமாற்றத்தின்
இருப்பிடத்திற்கு
உன் கணவனே
தெய்வம்!

வறுமையை
முதல் மகவாய்
பெற்றவளே!
என்றேனும் வா
தாயே...

அநாதை விடுதியின்
சுவர்களுக்கெல்லாம்
நான் உன் மகனென
கூறி அணைத்துக்கொள்
(அழைத்துச்செல்)

ப்ரியமுடன்
விடுதியில்
சிறையிருக்கும்
மகன்

எழுதியவர் : புலவூரான் ரிஷி (15-Apr-16, 9:55 pm)
பார்வை : 51

மேலே