சின்னஞ்சிறு ரகசியம்

என் எல்லாப்
பைத்தியகாரத்தனமும்
முடியாத முடிவிலிகள்...

என் அன்பும் கோபமும்
என் சோகமும் சந்தோஷமும்
என் அந்தந்த நேரத்து
முகமூடி...

எல்லா
முரண்பாடுகளிடமும்
ஓர் பூங்கொத்து
கேட்கவே ஆசைபடுகிறேன்...

தினமும்
குளியலறையில்
கவிதை படிக்கிறேன்
நுரைகளும் நீர்களுமாய்
சுவரோவியங்கள்...

அபத்தங்களில்
நிறைந்து கிடக்கிறது
சில நியாயங்களும் நிஜங்களும்...

-கோபி சேகுவேரா

எழுதியவர் : கோபி சேகுவேரா (16-Apr-16, 10:08 pm)
பார்வை : 169

மேலே