என்னவளுக்கான கவிதைகள் பகுதி - 5

கனவுகள் கலையுமடி
உறங்கி கண்விழித்தால்
என் காதலும் கலைந்திடுமோ
நீ மௌனத்தை தொடர்வதனால் .....

ஏளனமாய் சிரிக்குதடி - என்
கவிதைகள் எனைப்பார்த்து
வர்ணனை வற்றுதடி - நீ
காணாமல் போவதனால் ...

தனிமைகள் நரகமடி - அது
என் சிறகினை ஒடுக்குதடி
நீயே வழி சொல்லடி ..........
என் காதல் கனவு தொடர்ந்திடவே

எழுதியவர் : ருத்ரன் (17-Apr-16, 3:59 am)
பார்வை : 95

மேலே