பூரண மதுவிலக்கு

தரமான மது என்று -
தண்டோரா போடுது !
சில்லறை விற்ப்பனையில் -
சிறகடித்து விரியுது !

சந்தெல்லாம் தாறு மாறாய் -
சந்தையும் நடக்குது !
எதிர்த்து கேட்க்க போனாலோ -
ஏரி மிதித்து நசுக்குது !

மதுவை விடு !
மாற்றம் கொடு !
மதுவிலக்கு சாத்தியமா ?
ஐயங்களை அப்புறப்படுத்து !
அப்பாவிகளை ஆறுதல்படுத்து !

குடிப்பவன் அத்தனை பேரும் குபேரன் அல்ல ;
வேளையிலே வியர்வை சிந்தி -
வீதியிலே வேட்டி மறந்து -
வேதனையில் கிடப்பவனும் :
பாழாய்ப்போன மதுவால் அன்றோ !

மனதை திறந்து சொல் !
மாற்றம் கொடுக்க செல் !
பூரண மதுவிலக்கும் !
போடும் ஓட்டில் இருக்கு !

மதுவை ஒழிப்போம் !
மாற்றம் கொடுப்போம் !

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (19-Apr-16, 6:07 pm)
பார்வை : 356

மேலே