எச்சரிக்கை - மான நஷ்ட வழக்குத் தொடுப்பேன்

பெற்றோர் எனக்கு வைத்த பெயர் மல்லைய்யா
இந்திக்காரர்கள் வாயில் என் பெயர் நுழையாதே என்று
மல்லைய்யா எனும் பெயரை மல்யாவென்று
நான் மாற்றி ஆண்டுகள் பல உருண்டோடி விட்டன
வழக்கொன்றில் என் பெயர் அடிபடுவதைக் கண்டு
தமிழ் நாளிதழ்களிலும் தொலைக் காட்சிச் செய்திகளிலும்
என் அழகான பெயருக்குக் களங்கம் ஏற்படும் வகையில்
மல்லைய்யா என்று சொல்வதையும் எழுதுவதையும்
இனியும் நான் பொறுத்துக்கொள்ள முடியாது.
மல்யா என்று சொல்லாமல் மல்லைய்யா என்று
யார் உச்சரித்தாலும் எழுதினாலும்
ஒன்பதாயிரம் கோடி நஷ்ட ஈடு கேட்டு
வழக்குத் தொடுப்பேனென்று
இதன் மூலம் எச்சரிக்கிறேன்

எழுதியவர் : மலர் (19-Apr-16, 11:32 pm)
பார்வை : 136

சிறந்த நகைச்சுவைகள்

மேலே