சொல்வாயோ உன் நற்பதிலை

செம்பருத்தி பூ போல
செவ்வாயினால் சிரித்தவளே!
சிரித்துவிட்டு சென்றதாலோ
சிந்தைக்குள் நீ வந்துவிட்டாய்!
வந்துவிட்டாய் என்றெண்ணி
வாசலிலே நின்றுவிட்டேன்
நின்றுவிட்டேன் வாசலிலே
உன் வருகை தருவாயோ?

வருகை மட்டும் போதாது
வரவேண்டும் உன் மனதிற்குள்
மனதிற்குள் வர நான் என்ன செய்ய
மனமெல்லாம் ஒரே குழப்பமடி!

மழைவானில் நிலா தனியாக
மனவோடை எனக்குப் புதிதாக
புதிதாக நான் என்ன சொல்ல
உனக்குப் புரிந்ததைத் தான் நானும் சொல்ல
சொல்ல வந்ததைச் சொல்லி விட்டேன்
சொல்வாயோ உன் நற்பதிலை?

எழுதியவர் : பா.மோ.பாலாஜி (22-Apr-16, 8:28 am)
பார்வை : 73

மேலே