நெஞ்சு பொறுக்குதில்லையே
குழந்தை தொழிலாளர் கவிதைப் போட்டி
நெஞ்சு பொறுக்குதில்லையே
கந்தக பூமியில் பிஞ்சுகள்
அவர்கள் கைகளிலோ நெருப்புக்குச்சிகள்
அடுப்பெரிக்கும் விறகா அவர்கள்
ஆண்மையற்ற உலகே சொல்.
தாய் நீவி விட்ட பிஞ்சு கரம் அது
பஞ்சு பூபோல் காக்க வேண்டிய மனிதன்
கரி கட்டை போல் பொசுக்குவதேனோ
நெஞ்சு பொறுக்குதில்லையே பராசக்தி
இந்த நிலையினைத்தான் மாற்றிடுவாய் பராசக்தி.
காலையில் எழுந்தவுடன் பேருந்து
கட்டியம் கூறுவதோ தொழில் பேட்டை கங்காணி
தினம் வெந்து சாகும் என் இந்திய குடிமகன்
அவர்கள் என்ன குடியைக் கெடுக்க வந்த கோமன்களா
ஆசைக்கனவுகளை அறுவடை செய்ய வேண்டிய
அவர்கள் படும் அவலம் கண்டு
கண்ணீரால் நனைகின்றேன் பராசக்தி
கயவர்களை ஒழித்திடுவாய் பராசக்தி.
வழி ஒன்று சொல்லிடுவாய் பராசக்தி
வறியவர்கள் மேம்படவே பராசக்தி.
வறுமையில்லா உலகு வேண்டும் பராசக்தி
அதையும் காலத்தே தந்திடுவாய் பராசக்தி.
- கிருஷ்.ராமதாஸ், துபாய் [ பெரம்பலூர் ].