அம்மாவின் லட்டு
அம்மாவின் லட்டு
முதியோர் இல்லத்தில்
இருக்கும் அம்மாவுக்கு
மகன் அனுப்பிய
இனிப்பு பொட்டலத்தை
பிரித்து பார்த்தபோது
கல்யாணப் பந்தியில்
இலையில் வைத்த
லட்டு ஒன்றை
மறைத்து எடுத்து வந்து
அவன் பள்ளியிலிருந்து
வரும்வரை காத்திருந்து
கொடுத்த ஞாபகம் வந்தது