சிறகுகள்

விழியோரம் அரும்பும்
கண்ணீர்
பிரிவுத் துயரைச்
சொல்லும்
மேக ரதத்தில் ஊர்வலம்
பறவையின் சிறகிலே
பிரயாணம்
மழை நீரை அருந்தும்
சாதகப் பறவைகள்
சமுத்திரத்துக்கு மேல் வந்து
சிப்பி காத்திருக்கும்
ஒரு துளி நீர் வேண்டி
ககன வெளியில்
தன்னை இழந்து கொண்டே
நகரும் வெண்மேகம்
எவருடைய நினைவில்
தேய்கிறது நிலா
யாரைப் பார்த்து
கண்சிமிட்டுகின்றன
நட்சத்திரங்கள்
ஆழ்கடல்
ஆர்ப்பரிக்கும் அலைகள்
அற்றதாய் இருக்கும்
வைகறையில் கூவும்
குயில் தன் இணைக்காக
ஏங்கிக்குரலெழுப்பும்
றெக்கை முளைத்தால்
பறக்கலாம்
பறவையாக முடியுமா.