உணவு உழவு
உணவு/ உழவு
• முன்னுரை
• தொலைந்து கொண்டிருக்கும் விவசாயம்
• விசமாய் மற்றிக்கொண்டிருக்கும் உணவுப்பொருட்கள் (Slow Poison)
• வேண்டுகோள் (முடிவுரை)
முன்னுரை
மனிதனின் ஆயுட்காலம் 100 முதல் 120 வரை இருந்த காலம் மறைந்து 50-60 வயது வரை தான் வாழமுடியும் என்ற காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதற்கு முழுமையான காரணம் நாம் மட்டுமே. இதில் பெரும் பங்கு நம் அன்றாட உணவில் நாளுக்கு நாள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் மாற்றங்களும் அதில் கலந்திருக்கும் நச்சுப்பொருட்களுமே ஆகும். காரணம் தேடிப் பார்த்தால் உணவுப்பொருட்கள் உற்பத்தியாகும் முதல் நிலையிலிருந்து ஆரம்பமாகிறது. விவசாயம், ஆம் இங்கிருந்து தான் நம் வாழ்நாளை தொலைத்துக்கொண்டிருக்கிறோம்.
தொலைந்து கொண்டிருக்கும் விவசாயம்
இன்றைய காலகட்டத்தில் விவசாயம் பாதிக்க பல காரணங்கள் இருந்தாலும் இரு முக்கிய காரணம் 1. விவசாயத்தில் நச்சுப்பொருட்கள் கலந்த பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவது, 2. விளைநிலங்களில் கட்டிடம் எழுப்பி நிலங்களை வீணாக்குவது.
பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதினால் உணவில் உள்ள இயற்கை சத்து குறைந்துவிடுகிறது. இது மட்டுமல்லாமல் சமைக்கும் பொழுது நாம் பயன்படுத்தும் கலவை பொருட்கள், முழுமையாக வேக வைத்து சமைப்பது இதுபோல பல காரணங்களினால் உண்ணும் உணவில் ஆரோக்கியம் குறைந்து விடுகிறது.
பணத்திற்க்காக சிலர் விளைநிலங்களை விற்றுவிடுகின்றனர். பலரோ ஆசைக்காக அடுக்குமாடி குடியிருப்பை கட்டுகிறார்கள், இதில் தொழிற்சாலைகள்வேறு. காரணம் கேட்டால் மக்கள் தொகை அதிகமாகிவிட்டாது வாழ்வதற்க்கு வீடு இல்லை என்ற பூசல். இதற்க்கும் ஒரு வழி உண்டு. எந்த விதமான நிலத்தில் கட்டிடம் கட்டுவது என்று மண்ணை சோதித்து கட்டலாம். விளைநிலங்களின் மண்ணை எடுத்து அதன் தரத்தை சோதித்துப்பார்த்து அதில் எந்த விதமான பொருளை விதைகலாம் அல்லது விவசாயத்திற்கு உபயோகபடுமா இல்லையா என்று சொல்லிவிடுவார்கள், அப்படிபட்ட நிலங்களை கட்டிடம் கட்ட பயபடுத்தலாம்.
ஒரு சிலர் முயற்சியால் மட்டும் விவசாயத்தையும், உணவு முறைகளையும் காப்பாற்ற முடியாது. நம் அனைவரின் ஒத்துழைப்பும் தேவை.
விசமாய் மற்றிக்கொண்டிருக்கும் உணவுப்பொருட்கள் (Slow Poison)
அன்றைய காலங்களில் புகை வண்டிகள் குறைவு, ப்ளாஸ்டிக் (Plastic) பொருட்கள் இல்லை, குப்பை கூளங்கள்சேரவில்லை, நீர் மாசுபடுவதில்லை அதனால் விவசாயமும் பாதிக்கப்படவில்லை. தூய்மையான காற்று, நீர், இயற்கை உரம் பயன்படுத்தி உணவுப்பொருட்கள் தயாரித்ததால் சத்தான உணவு கிடைத்தது. இவற்றை நேற்றைய வரலாறாகப் பேசிக்கொண்டிருக்கிறோம் நாம். இது குடி நீரைகூட விலைகொடுத்து வாங்கும் காலமாக உள்ளது.
காய்கறிகளில் தான் ஊட்டச்சத்து நிறைந்துள்ளது என்று அனைவரும் அறிவோம். ஆனால் அந்த இயற்கை உணவுப்பொருட்களும் உரங்கள், செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தி இன்று விஷமாய் வருகிறது. வெளிநாட்டின் உணவின் ஆட்சி இன்று நம் நாட்டில் அதிகமாக உள்ளது. அந்த உணவுப்பொருளின் விமர்சனங்கள் பல வலைதலங்களிலும், ஊடுருவகங்களிலும் (Media) பார்த்தும், கேட்டும் இருப்போம் அதனால் பல வியாதிகளும், உடல்நல குறைவும் ஏற்ப்படும் என்று தெரியும்.இதேபோல் இன்னும் சில ஆண்டுகளில் அந்த விமர்சனம் நம் நாட்டு உணவிர்க்கும் வந்துவிடும். இன்று வாழ்வதற்க்காக வருங்காலத்தை அழிக்கவேண்டாம்.
வேண்டுகோள்
இயற்கையை சுத்தம் செய்யவிட்டலும், அசுத்தம் செய்ய வேண்டாம் என்று வேண்டுகிறேன். ப்ளாஸ்டிக் பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாக அழிப்போம்.
உணவை வீணாக்க வேண்டாம். விஷமாக்கவும் வேண்டாம்.
“விவசாயத்தை வரலாறாகா மாற்ற வேண்டம்,
நம் வருங்காலத்திற்க்காக அதைக்காப்போம்”.