அம்மா - எழுத்தல்ல

அருகில் எத்தனை
ஆட்கள் அமர்ந்திருந்தாலும் நான்
அழைக்காமல் ஓடிவந்து
ஆவண செய்யும்
அன்புக் கரம்
அன்னை!
துயரத்தில் உழலும் போதும்
மனம் மட்டும்
தேடும் ஓரே உறவு
அம்மா!
வார்த்தைகள் மரணிக்கலாம்
உணர்வுகள் மரணிப்பதில்லை
பேச ஆரம்பிக்கும் முன்னே நம்
அழுகைக்கு அர்த்தம் புரிந்து
சேவைகள்ஆற்றியவள்
அம்மா!
பிடிமானம்தேடி நடக்கமுயல்கையில்
தூணாய் தன்னையே
தந்தவள் தாய்!
துயரங்களிலும் நாம் பார்த்து
புன்முறுவல் செய்யும் "கண்ணாடி"
அம்மா!
"அம்மா "
பாசங்களால் கோர்க்கப்பட்ட
வார்த்தை
எழுத்துகளுக்கு ஓய்வு கொடுத்த
ஒரே வார்த்தை
"அம்மா"