ஆசை கொண்ட நெஞ்சம்

என்
ஆசை கொண்ட நெஞ்சமது
அமைதியட்ட்று அலைகிறது,
அத்தனைக்கும் ஆசைப்பட்டு
அலையாக எழுகிறது!

நீர் சுழலில் பரிசளைப்போல்..
மனம் சுற்றி சுற்றி வருகிறது.
அடர் காட்டிற்குள் குருடனைப்போல்
பாதை தேடி தவிக்கிறது!

காரணமே தெரியாமல்
காலை , மாலை கழிகிறது!
காப்பாற்றும் கை தேடி,
ஓலமிட்டு அழுகிறது!

நாளும் ...
உறங்காமல் விழித்திருந்தேன்!
உணவிருந்தும் பசிதத்திருன்தேன்!
உறவின்றி தனித்திருந்தேன்!
உதவிக்கு காத்திருந்தேன்!!

மனம் கொள்ளா இடமதுவே
மாளிகையாய் இருந்தபோதும்
மகிழ்ந்திட தான் கூடிடுமோ?

ஆசை கொண்ட பாவத்தால்
அடிபட்டு அழுகின்றேன்!
மருந்தாக யார் வருவார்?
என் மன வாட்டம் போக்கிடுவார்!?

எழுதியவர் : நேதாஜி (4-May-16, 3:23 pm)
Tanglish : aasai konda nenjam
பார்வை : 115

மேலே