தினம் ஒரு காதல் தாலாட்டு - ஜோடி பாடல் 35 - = 96
“என் ஜோடி செல்லக் கிளி
கை நழுவிப் போனதடி
அது போன நாள் முதலாய்
என் மனம் ஊனமடி”
“உன் ஜோடி செல்லக் கிளி
உன்னைவிட்டுப் போகும்போது
ஏன் பார்த்து நின்றாய் வேடிக்கை ?
இனி சுகம் பெறுமா என் வாழ்கை ?”
ஓடையிலே குலவியதும்
தாடையிலே தடவியதும்
மறப்பது சுலபமில்ல..
மறந்தால் அது காதலில்ல..!
நெடுநாள் காதலுக்கு
இடையிலே தடை எதற்கு ?
காதல் மனம் தாங்கிடுமா
என் தங்கமே சொல் எனக்கு !
மேகமின்றி மழை ஏது
மோகமின்றி சுகம் ஏது
நீயின்றி நான் ஏது
நானொரு பரம சாது
தூக்கனாங் குருவிகள்
வீரத்தை அறியாது
அது கோழையா இருந்துப்புட்டா
கூடுகட்ட முடியாது...