உனக்காக துடிக்கும் என் இதயம் 555
என்னவளே...
என் உள்ளத்தில் வளார்ந்தது
உன்மீதான காதல் எனக்கு...
என் உணர்வுகளுக்கு
உயிர் கொடுத்து...
விழிகளில் கனவாக
நித்தம் வருகிறாய்...
என்னை முழுவதும் உன்
இதயத்தில் புதைத்தாய்...
நான் இப்போதெல்லாம்
அதிகம் உறங்குகிறேனா...
சொல்கிறார்கள் நண்பர்கள்...
என் கனவில் வருவது நீ என்பது
என் தலையனைக்குதானே தெரியும்...
வினாடிக்கு வினாடி
இடைவெளிகள் உண்டு...
உன்னை நினைக்க இடைவெளி
இல்லையடி என் இதயத்திற்கு.....