இனி ஆயுள் அவ்வளவு தான்

நோயாளி ; ரொம்ப நாளாகவே ஒரே இருமல், கை,கால்கள் எல்லாம் பயங்கர வலி, மூட்டு வலியும் இருக்குது டாக்டர்

மருத்துவர் ; தங்களை முழுமையாக பரிசோதனை செய்த பிறகு தான் உங்களுக்கு என்ன பிரச்சனை என்பது தெரிய வரும்
தங்களை முழுமையாக பரிதோசனை செய்ய ரூபாய் இரண்டாயிரம் செலவாகும் ,பரிசோதனையை இப்போதே செய்து விடலாமா

நோயாளி ; சரிங்க டாக்டர்,இப்போதே பரிசோதனை செய்துவிடலாம்

(எல்லா பரிசோதனைகளும் முடிந்த பிறகு)

நோயாளி ; டாகடர் என்ன பிரச்சனை

(மருத்துவர் கொஞ்சம் நேரம் மௌமாகவே இருந்தார் )

நோயாளி ; டாக்டர் எனக்கு என்ன? ஏன் மௌனமாக இருக்கீங்க?

மருத்துவர் ; உங்களை நீங்களே தைரியப் படுத்திக் கொள்ளுங்கள் ,நான் சொல்வதை கேட்டு நீங்கள் பதட்டமோ ,வருத்தமோ படக்கூடாது இனிமே தான் நீங்க ரொம்ப தைரியமா இருக்கனும் ,
உங்களுக்கு ஏய்ட்ஸ் நோய் உள்ளது ,அது உங்கள் உடலுக்குள் தீவிரமாக பறவி விட்டது இனி நீங்கள் வாழப் போவது இன்னும் ஓரிரு வாரங்கள் மட்டுமே

(இதை கேட்ட நோயாளி சிரித்து விடுகிறார் )

மருத்துவர் ; உங்களுக்கு வருத்தமே ஏற்படவில்லையா, நான் இவ்வளவு அதிரச்சியான ஒன்றை கூறியுள்ளேன் ,ஆனால், நீங்கள் இப்படி சிரிக்கின்றீரே உங்களுக்கு வேதனையாக இல்லையா

நோயாளி ; டாக்டர் நீங்க தான சொன்னீங்க நான் சாகப்போகிறேன் என்று, அதனால் தான் சிரித்தேன் சிரித்தால் ஆயுள் கூடும் தானே டாக்டர்என்று கூறியவாறே சிரித்த படியே வேதனையை உள்ளேயே அடக்கிக் கொண்டு மருத்துவருக்கு நன்றி கூறி வெளியே செல்கிறார் ,,


நாம் செய்யும செயல் இன்னொருவரை தெரியாமல் கூட காயப் படுத்தி விடக் கூடாது

நாம் இவ்வுலகை எப்படி நடத்துகிறோமோ
அப்படியே தான் நம்மையும் இவ்வுலகம் நடத்தும்


-விக்னேஷ்

எழுதியவர் : விக்னேஷ் (6-May-16, 4:14 pm)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 405

மேலே