நீ இல்லாமல் நான்

அன்றொரு நிமிடம் அமைதி,
அடிமனதில் பல இடி ஏந்தி
போகாத பொழுது போர் நடக்க,
வாடாத நிமிடம் உன்னை நினைத்த
நொடியும் நோய் உற்றே நொந்து போனேன்,
தனிமை தாகம் சாகாத வரம்,
துனைக்கு நீ ... இல்லாமல் போகையில்,
களவாட வந்த காதல் என் மனதைக் கவர்ந்து போக ,
கருவறை மழலை போல் திக்கற்று நிற்க நேர்ந்ததோ....
பிரிவுக்கு உருவம் உண்டோ எனில் ,
சண்டையிட்டு சாதனை புரிவேன்.... என்னை எதிர்தல்,
மண்டியிட்டு மனதை துறப்பேன்... என்னை ரசித்தால்,
சல்லடையாய் வடித்தாலும் என் கண்ணிரில்
அவள் நழுவி செல்கிறாள் ,
கண்ணிடையில் பிடித்தாலும் கண் உறக்கத்தில்
அவள் விழகி செல்கிறாள் .
நான் என் செய்வேன், நீ ...... தூரத்தில் இருக்கும்போது...