என்னவளுக்கு என்னவளதிகாரம்

எங்கிருந்தாய்
பெண்ணே...!

எனைத்தேடி கண்டுபிடிக்க
என்ன செய்தாய்
பெண்ணே...!

எப்படி எனை அரிந்தாய்...! பெண்ணே...!

எந்தன் கனவிற்கு
உந்தன் உருவம் கொடுத்தாய்....!
பெண்ணே...!

எந்தன் கவிதைக்கு
உந்தன் உயிர் கொடுத்தாய்....!
பெண்ணே...!

பெயரற்ற என்னவளதிகாரத்திற்கு
உன் பெயர் கொடுத்தாய்....!
பெண்ணே...!

என்னுடன் நகரும் நிழலிற்கு
துணை கொடுத்தாய்...!
பெண்ணே...!

உன் வரவால்
எந்தன் அர்த்தமற்ற வாழ்க்கைக்கு
உன்னையே
அர்த்தமாய் கொடுத்தாய்...!
பெண்ணே...!

உன்னைக்கண்ட
அக்கணம்
கால் நூற்றாண்டு
காபாற்றிய ஆணின் கன்னியத்தை உன்னிடம் காப்பாற்ற தவறிவிட்டேன்...!
பெண்ணே...!
ஏன் என்று தெரியவில்லை...!
மன்னித்துவிடு தவறெனில்...!!!

இவன்
பிரகாஷ்

எழுதியவர் : பிரகாஷ் (8-May-16, 12:16 pm)
பார்வை : 96

சிறந்த கவிதைகள்

மேலே