அம்மாக்கள் இல்லையென்றால் அகிலமேது

தூளியிலே சுகமாய்
தூங்கியதும்
அம்மா சேலையில் தான்..

இத்தனை வயதாகியும்
இன்னும் தேடுவது
அம்மா சேலைப் போர்வைதான்..

சிறு வயதிலே எனக்கு
கணக்கு வகுப்பு என்றாலே
வயிறு வலிக்கும்...

அதை உண்மையென நம்பி
வாத்தியாரிடம்
விடுப்பு கேட்பதும் அம்மாதான்...

வயிறு வலித்தால் பசிக்காது
என்று தெரிந்தும் பாசமாய்
ஊட்டுவதும் அம்மா தான்...

அம்மாக்கள் இல்லையென்றால்
அகிலமேது ?
அவளில்லாமல் அன்பு ஏது?

அம்மாவை போற்றுவோம்
அரவணைப்போம் ..
எப்போதும்....

எழுதியவர் : ஜெய் ரெட்டி (8-May-16, 5:30 pm)
பார்வை : 81

மேலே